banner

Distribution of cricket equipment.

11 Jun 2023

Distribution of cricket equipment to Kinguragodai Rajarata National School through Koddaimunai Sports Village. Every year cricket equipment is donated for cricket development in Batticaloa through koddaimunai Sports Club and the village. In this way, this time the external districts were considered beyond the Batticaloa district. Based on this, yesterday (10.06.2023) an amount of cricket equipment was presented to Rajarata National School, Polonnaruwa, Kinguragodai by the senior members of Koddaimunai Sports Club. The event was organized with an exhibition match between the students of EPP Academy, Batticaloa and Kinguragodai Rajarata School at the Minneriya Gunners Club ground. In this, the President Mr. P. Sadachararaja, founders of the Club, Mr. E. Shivanathan, Mr. S. Ranjan and senior members Mr. S. Kasipillai, Mr. Beet Joseph, Mr. K. Dharmaretnam, Mr. M. Jesurasa and EPP's Head Mr. V. Vasanthamohan, Coach Mr. T. Mathiraj and parents and children also participated. Similarly, on behalf of Rajarata School, Provincial Cricket Coach Mr. BTA Vimalaweera, Master in-charge Mr. Nuwan Budhika Prasad and many other students and parents of the school attended and celebrated.

கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தின் ஊடாக கிங்குராகொடை ரஜரட்ட தேசிய பாடசாலைக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைப்பு….. ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பில் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் மற்றும் கிராமத்தின் ஊடாக கிரிக்கெட் மேம்பாட்டிற்காக கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தையும் தாண்டி வெளி மாவட்டங்கள் கருத்தில் கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் முதல் கட்டமாக நேற்றைய தினம் (10.06.2023) பொலன்னறுவை, கிங்குராகொடை ரஜரட்ட தேசிய பாடசாலைக்கு ஒரு தொகை கிரிக்கட் உபகரணங்கள் கோட்டைமுனை விளையாட்டுக் கழக மூத்த உறுப்பினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இன் நிகழ்வு மின்னேரிய கண்ணஸ் கழக மைதானத்தில் மட்டக்களப்பு EPP அகாடமி மற்றும் கிங்குராகொடை ரஜரட்ட பாடசாலை மாணவர்களுக்கும் இடையிலான ஒரு கண்காட்சி போட்டியுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் சார்பாக தலைவர் திரு. P. சடாச்சரராஜா, கழக ஸ்தாபகர்களான திரு. E. சிவநாதன், திரு. S. ரஞ்சன் மற்றும் மூத்த உறுப்பினர்களான திரு. S. காசிப்பிள்ளை, திரு. பீற் ஜோசப், திரு. K. தர்மரெட்ணம், திரு. M. ஜேசுராசா மற்றும் EPP இன் இணைப்பாளர் திரு. V. வசந்தமோகன், பயிற்றுவிப்பாளர் திரு. T. மதிராஜ் மற்றும் பெற்றோர்கள், சிறுவர்களும் கலந்து கொண்டனர். அதேபோன்று ரஜரட்ட பாடசாலை சார்பாக மாகாண கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் திரு. BTA விமலவீர , பொறுப்பாசிரியர் திரு. நுவான் புத்திக பிரசாத் அவர்களும் மற்றும் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

WhatsApp Image 2023-06-11 at 04.14.54.jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.53.jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.52.jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.44.jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.52 (1).jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.43 (1).jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.41.jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.51.jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.35.jpegWhatsApp Image 2023-06-11 at 04.14.33.jpeg
logo

Koddaimunai Sports Club

Copyright © 2024 koddaimunaisportsclub.com. All Rights Reserved.
Designed and Developed by Vital Masks